தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்
🌹🌹🌹🌹🌹 *தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்* 🌼🌼🌼🌼🌼🌼 *ஒடவை ஆலிம்* இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. இந்தச் சிறிய தொகுப்பில் ஒரு முஸ்லிம் எதற்காகத் தொழ வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் என்ன மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறுவதைப் பார்ப்போம். 1. தொழுகையின் அவசியம்: - மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை! இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது: - நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103) மறுமையில் முதல் விசாரனை தொழுகை...